Friday, December 30, 2005

பிரிகிறேன்

இன்னும்



ஒரு நாளைக்கு



மட்டும்தான்



நான்



இருப்பேன்.



என்னைப் பற்றி



கவலைப் பட



வேண்டாம்.



என்னை பற்றி



நினைக்கவும்



வேண்டாம்.



இப்படிக்கு,



2005.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Thursday, December 29, 2005

கங்குலி...?

கங்குலியின் மகன் : என்ன இது அப்பா சிக்ஸ் சிக்ஸா அடிக்கிறாரே?

கங்குலியின் மனைவி : ஐயோ! அது அட்வர்டைஸ்மென்ட்.

Monday, December 26, 2005

இன்றைய தத்துவம் - 2

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் ப்ரைஸ் கிடைக்கும்.

Tuesday, December 20, 2005

சந்திரமுகி காட்சி

பார். உன் கங்குலிய பார். முழுசா திராவிட் மாதிரி இந்தியன் டீம் கேப்டன் ஆக துடிக்கும் கங்குலிய பார். இப்படித்தான் தினமும் ராத்திரி கங்குலி இங்க வந்து சின்ன பசங்கள பால் போட சொல்லி திராவிட் மாதிரி பால் அடிச்சு பிராக்டீஸ் பண்ணிட்டே இருக்கான்.....

டால்மியா : என்ன கொடுமை சாப்பல் இது?

Monday, December 19, 2005

பில் கேட்ஸ் சென்னையில்

பில் கேட்ஸ் சென்னை வரைக்கும் வந்துட்டு ஏன் எங்க வீட்டுக்கு வரலை தெரியுமா?



Prestige Problem.



போன வாட்டி நான் USக்கு போனப்ப அவங்க வீட்டுக்கு போகலை.

இன்றைய தத்துவம் 1

1000தான் இருந்தாலும்
1001தான் பெருசு.

Saturday, December 17, 2005

யெஸ். ஐ...

நைட் ஃபுல்லா யோசிச்சேன்.

2 மணில இருந்து 3 மணி வரைக்கும் உங்கிட்ட எதுக்காக சொல்லனும்னு யோசிச்சேன்.

3 மணில இருந்து 4 மணி வரைக்கும் உன்கிட்ட சொன்னா என்ன தப்புன்னு யோசிச்சேன்.

4 மணில இருந்து 5 மணி வரைக்கும் சொன்னா உங்கிட்டதான் முதல்ல சொல்லனும்னு முடிவு பண்ணிட்டேன்.

யெஸ்.

நான் புதுசா இந்த பிளாக்க ஆரம்பிச்சுருக்கேன்.