Thursday, March 22, 2007

அண்ணே...

எனக்கு ஒரு சந்தேகம்...

நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

ஓவியக் கலைன்னா படம் வரையறது.

அப்ப தவக்களைன்னா?


- நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்

வடி கட்டின கஞ்சத்தனம்

சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.

உடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.

அட்வைஸ் அய்யாவு..

வாழ்க்கையில் நடக்கும் பொழுது, ஏற்றமும் இருக்கும், இறக்கமும் இருக்கும்; மலர்களும் இருக்கும், முட்களும் இருக்கும்.


அதனால எல்லோருக்கும் நான் சொல்வது என்னவென்றால், எங்கே போனாலும் செருப்பு(அல்லது ஷூ) அணிந்து செல்லுங்கள்!!!

இன்றைய தத்துவம்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்

ஆனா,

நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.


- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

Wednesday, March 21, 2007

அண்ணே...

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?

"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும்.


- ரோட்டில் உருண்டு பிரண்டு யோசிப்போர் சங்கம்.

Monday, March 19, 2007

வர மாட்டாய்ங்களோ!!!

இன்ஸமாம் : வருவிவிவியா!!! வரமாட்ட்ட்டியா? வரலேன்னா உன் பேச்சுக் கா!!!

டிராவிட் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்!!!

பங்காளி

இன்ஸமாம் : பங்காளி! பை டா. நாங்க கெளம்பறோம்.

டிராவிட் : அட இருங்க பங்காளி. ஒரு நாள் வெய்ட் பண்ணுங்க. நாங்களும் வந்துடுவோம்.

இன்ஸமாம் : சரி பங்காளி! ஒரே டிக்கட்டா எடுத்துடுவோம்!!!

Friday, March 16, 2007

இன்றைய தத்துவம்

என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும்,



அதால,



டிகிரி வாங்க முடியாது!!!

இந்தியா ஏன் கஷ்டப்படுது?

மக்கள்தொகை நூறு கோடிக்கு மேல இருந்தும் இந்தியா ஏன் கஷ்டப்படுது? ஏன்னா, 7.9 கோடி பேர் ரிடையர் ஆனவங்க. 30 கோடி பேர் ஸ்டேட் கவர்மென்ட், 17 கோடி பேர் சென்ட்ரல் கவர்மென்ட்(ரெண்டு பேரும் வேலை செய்யறதில்லை!). 1.1 கோடி பேர் ஐ.டி. அவங்க இந்தியாவுக்காக வேலை பார்ப்பதில்லை. 25 கோடி பேர் ஸ்கூலுக்கு போகும் மாணவர்கள். இரண்டு கோடி பேர் 5 வயசுக்கு கீழேயுள்ள குழந்தைகள். 15 கோடி பேர் வேலையில்லாதவர்கள்.1.2 கோடி பேர எப்பவும் நீங்க ஆஸ்பத்திரில பார்க்கலாம். புள்ளி விவர கணக்குப்படி 79,99,998 பேர் சிறையிலிருக்கிறார்கள். மீதியிருக்கிறது நீங்களும், நானும்தான். நீங்களும் உங்க கம்ப்யூட்டர் ஸ்கிரீன்ல பிஸியா இருக்கீங்க!!! நான் ஒருத்தனே தனியா எப்படி இந்தியாவ ஹேண்டில் பண்றது???

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர வழிகள்


நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கனும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

ஒரு கேள்வி

இது அறிவாளிங்களுக்கான ஒரு கேள்வி!!!














































































அதான் அறிவாளிங்களுக்குன்னு சொல்லிட்டன்ல. அப்புறம் என்ன லொட்டு லொட்டுனு அமுக்கிகிட்டு?! போங்க. போய் வேலையப் பாருங்க.

Tuesday, March 06, 2007

குட் நைட்

விழிப்போம் என்ற நம்பிக்கையில் தூங்குவதைவிட,

நாளைக்காவது குளிப்போம் என்ற லட்சியத்தோடு தூங்கு!!!

அண்ணே...

நாம 21ஐ "டுவென்டி ஒன்"னு சொல்றோம்.

31ஐ "தேர்ட்டி ஒன்"னு சொல்றோம்.

41ஐ "ஃபார்டி ஒன்"னு சொல்றோம்.

அப்ப ஏன்,

11ஐ மட்டும் "ஒன்ட்டி ஒன்"னு சொல்லக் கூடாது?

- பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.

வெட்டி

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

ஆசிரியர் : ?!?!

குங்குமம்

குங்குமம் - இந்த வாரம்!





























































சந்தனம் - அடுத்த வாரம்!!!