Tuesday, February 28, 2006

நல்லாப் பாருடா

உன் தலை மேல கொம்பு இருக்கா?



இல்ல?



இன்னொரு தடவ சரியாப் பாரு.



பார்த்தியா?



இருக்கா?



இல்ல?



நிஜமா?



இல்ல!?!?



நிச்சயமா?



சரி விடு!



குரங்குக்கு இருக்காது.

Made for Each Other

நேத்து ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன். ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி. அந்த மாதிரி ஜோடியை நான் லைஃப்ல பார்த்ததே இல்லை. அப்படி ஒரு அழகு. அதான் சடக்குனு காலில் மாட்டிட்டு வந்துட்டேன்.

ஹாய்...

என்ன பண்ணிட்டிருக்கே? ?



என்னை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாயா? ?



ஹவ் ஸ்வீட்!!!



நானும் அதேயேதான் பண்ணிட்டிருக்கேன்...



என்னைப் பற்றியே நினைத்து கொண்டிருக்கிறேன்.

Monday, February 20, 2006

கடிச்சிருச்சு

ஒரே ஒரு எறும்ப Cut பண்ணா என்ன ஆகும்?


"கட்"டெறும்பாகும்




பென்குயினுக்கு எதிர்பதம் என்ன?


ஆண்கிங்




சுமை தாங்கும் பறவை எது?


Crane.

கரை

கப்பல் கேப்டன் : கரை வந்து விட்டது! கரை வந்து விட்டது!!


பிரயாணி : ஸர்ஃப் எக்ஸெல் போடுங்க. கரை போய்டும்.

சத்தியமாய் சொல்லு

நாம ரெண்டு பேரும் உயிருக்குயிரான நண்பர்கள்தானே


நீ விரல்
நான் நகம்


நீ நீர்
நான் மீன்


நீ நட்சத்திரம்
நான் நிலா


நான் மரம்
நீ குரங்கு, சரியா?


குதிக்கும்போது பாத்துக்குதி.

Friday, February 17, 2006

கொசுத் தொல்ல

டாக்டர் : கொசு கடிக்காம் இருக்க இந்த க்ரீமத் தடவுங்க.

வந்தவர் : அது எப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவா புடிச்சு க்ரீம தடவுறது.

மலர்

நீ ஒரு மலர்


ஆங்கிலத்தில் ஃபிளவர்


சம்ஸ்கிருதத்தில் புஷ்ப்


அரபியில் ஜுரா


உருதில் குல்






ரொம்ப சந்தோஷப்படாதே!




ஏன்னா,





இந்தியில் நீ ஒரு ஃபூல்(Fool).

Good Morning

காலையும் நீயே


மாலையும் நீயே


மதியமும் நீயே


இரவும் நீயே


விடிஞ்சிருச்சு நாயே


எந்திரி பேயே

Wednesday, February 15, 2006

அடடே!

நீ ஒவ்வொரு முறை


கண்ணாடியினருகில் வரும் போதும்


அது சொல்லும்


"பியூட்டிபுல்! பியூட்டிபுல்!!"


ஆனால்


நீ அதைவிட்டு விலகிசெல்லும்போது


அது சொல்லும்


"ஏப்ரல்பூல்! ஏப்ரல்பூல்!!"

கவனமாக படிக்கவும்

கஜஜேகெ கொஹாடு லொகு கிகா கொஜுகு குகாக் ஈகோகே கஜெவாஜோ ஜயூமோகு ககாஜா குஜாகி ஊஜீகா காவியூக் ஜரக்யகோ
கொஹடி ஜேகெயூ மொஜியாஹு கொர்க் ஹூரம் கோவிர்ஜெ விக்ரரபா ஹை





வாழ்த்துக்கள்.




நீங்கள் குரங்குகளின் மொழியை கற்றுக் கொண்டீர்கள். வந்து உங்கள் வாழைப்பழத்தை வாங்கிச் செல்லுங்கள்.

Saturday, February 11, 2006

இது கொஞ்சம் ஓவர்

நான்கு எறும்புகள் ஒரு காட்டு வழியில் சென்று கொண்டிருந்தன. அப்பொழுது ஒரு யானை எதிர்பட்டது. உடனே முதல் எறும்பு சொன்னது, "நாம் அதை கொன்று விடுவோம்".


இரண்டாவது எறும்பு, "நாம் அதன் காலை உடைத்து விடுவோம்" என்று சொன்னது.


மூன்றாவது எறும்பு, "அதை நாம் நமது பாதையிலிருந்து தூக்கியெறிந்து விடுவோம்" என்றது.





கடைசியாக நான்காவது எறும்பு, "பாவம்! அதை நாம் விட்டு விடுவோம். ஏனென்றால், அது தனியாக வந்திருக்கிறது. நாம் நான்கு பேர் இருக்கிறோம்."

இன்றைய தத்துவம்

என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,


முட்டைதான் போடும்.


நூத்துக்கு நூறெல்லாம் போடாது.

Sincere Apology

If U dont like my SMSs &


dont like to read them,


or if my messages disturb U,


then please dont hesitate,


feel free to





Throw Your Mobile

Wednesday, February 08, 2006

தயவுசெய்து...

தயவுசெய்து என்னை புரிந்து கொள்.


இனிமேல் என்னை தொந்தரவு செய்யாதே.


என்னை தனியாக இருக்க விடு.


நேற்றிரவு உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததில் தூக்கமே இல்லை.


அதனால் தயவுசெய்து எனது வாழ்க்கையோடு விளையாடேதே!






சர்தார்ஜி கொசுவிடம் கெஞ்சி கொண்டிருந்தார்.

அண்ணே - V

ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.


ஆனா


Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?

இன்றைய

தத்துவம் இல்லே. எதார்த்தமா சொல்றேன் கேட்டுக்க.


என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,


சினிமா Colourல தான் ஓடும்.

Wednesday, February 01, 2006

எப்பொழுதும் கண் முன்னே...

நீ என்னை விட்டுவிட்டு



எத்தனை ஆயிரம் மைல்கள் தொலைவிலிருந்தாலும்,



எப்பொழுதும் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்,





ஏதாவதொரு டிவி சானலில்,






டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரபி, அனிமல் பிளானட் என்று.

அண்ணே - IV

மெழுகை வச்சு மெழுகுவர்த்தி செய்யலாம்,



அதே மாதிரி,



கொசுவை வச்சு கொசுவர்த்தி செய்ய முடியுமா?

இன்றைய தத்துவம்

எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால் இருந்தாலும்,



ஒரு காலுக்கு கூட



ஷூவோ, செருப்போ மாட்ட முடியாது.