Wednesday, February 28, 2007

இறைவா! இவர்களை மன்னித்துவிடு!!!

எல்லா பாவத்திலிருந்தும் விடுபட இறைவனின் இந்த படத்தைப் பாருங்கள்.















































பாவிகளின் கண்களுக்கு அவர் தெரிய மாட்டார்.

இனியாவது திருந்துங்கள்!!

மொழி'பெயர்ப்பு'

ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?


















தெரியலையா?!?!


நான் பார்க்க நான் பார்க்க நான்

உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!

நாட்ட்ட்ட்டாமை....

பசுபதி : ஐயா...

நாட்டாமை : என்றா பசுபதி?

பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....

நாட்டாமை : அட என்றா??

பசுபதி : அதான் என்றோம்ல!!

நாட்டாமை : ?!?!

இன்றைய தத்துவம்...

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.

ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

Friday, February 23, 2007

இன்றைய தத்துவம்

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,

ரயிலேறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

சொன்னார்கள்

"சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி."

- ஜவஹர்லால் நேரு.


"நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்."

- மாஹாத்மா காந்தி.


எதை ஃபாலோ பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கே!?!?

பஞ்சர்

வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?

பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!

வடிவேலு : ?!?!

அண்ணே...

விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.

ஆனா,

கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?

- ரூம் போட்டு, மல்லாக்கப் படுத்து, பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.

Saturday, February 17, 2007

டப்பிங் படங்கள்

உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.



திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).

செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)

புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)

வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)

வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)

Thursday, February 15, 2007

சர்தார்

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!
சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.
சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.

என்ன இது அக்கிரமம்?

மாணவன் : சார்! இது என்ன?

ஆசிரியர் : கேள்வித்தாள்!

மாணவன் : சார்! இது என்ன?

ஆசிரியர் : விடைத்தாள்!

மாணவன் : என்ன அக்கிரமம் சார்? கேள்வித்தாள்ள கேள்வி இருக்குது. ஆனா விடைத்தாள்ள விடையை காணோம்!

ஆசிரியர் : ?!?!

இதுதான் அர்த்தமா?

காதலிக்கும் பெண்கள் சொல்லும் வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்!

ஐ லவ் யூடா - உனக்கு ஆப்பு கன்ஃபார்ம்டா!
ஐ மிஸ் யூடா - உன்னை தொலைச்சு கட்டப் போறேன்டா!
ஊ அர் மை லைஃப்டா - உன் உயிர் என் கைலடா!
டேய், யூ ஆர் மய் செல்லம் - டேய் நீ என் வீட்டு நாய்!
டேய், ஐ வான்ட் டூ மேரி யூ - டேய் உனக்கு மரண தண்டனை!!!

(உனக்கு லவ்வு ஸ்டார்ட் ஆகுதுன்னா 7:30 ஸ்டார்ட் ஆகுதுன்னு அர்த்தம்!!!)

Friday, February 09, 2007

ஹை

எப்படியிருக்கீங்க? அப்புறம், ஒரு முக்கியமான விஷயம். ரீஸன்ட்டா எடுத்த உங்களோட ஃபோட்டோ ஒன்னு வேனுமே. சே! சே! நீங்க நினைக்கிற மாதிரி குரங்கு, கிரங்குனெல்லாம் அப்புறம் கிண்டல் பண்ண மாட்டேன். ஒரு ஹாபிக்காக, 'கடவுளின் மிகப்பெரும் தவறுகள்' அப்படிங்கிற பேருல ஒரு ஆல்பம் கலெக்ட் பண்றேன் அவ்வளவுதான்.

சேர்ந்து

என்னையும் ஒன்னையும் சேர்த்து வச்சு பார்த்தா எப்படி இருக்கும்?

இப்படித்தான் இருக்கும்.

N1

இப்படித்தான் புதுசு புதுசா யோசிக்கனும்.

Of India

செல்லோ : The Pen of India

லக்ஸ் : The Soap of India

அமுல் : The taste of India

நீங்க : Total waste of India

எழுதியவர் : The Star of India

மூன்று உண்மைகள்

உண்மை ஒன்று : உங்கள் நாவால், உங்களது எல்லாப் பற்களையும் தொட முடியும்.

..
..
..
..
..
..
உண்மை இரண்டு : இதை படித்த பின் நூற்றுக்கு நூறு முட்டாள்கள்(முட்டாள்கள்தான்!), தங்கள் நாவால் தங்கள் பற்களை தொட முயலுவார்கள்.

..
..
..
..
..
..
உண்மை மூன்று : உண்மை ஒன்று பொய்

அப்ளிகேஷன்

ஒருவன் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் இன்டர்வியூவுக்கு சென்றான். அங்கெ முதலில் ஒரு அப்ளிகேஷன் ஃபார்மை நிரப்ப சொன்னார்கள். இவனும் நிரப்ப ஆரம்பித்தான். ஒரு இடத்தில் "Salary Expected :" என்று இருந்தது. இவன் வெகு நேரம் யோசித்தான். பின்பு அதற்கு நேராக எழுதினான்.

"YES."