Tuesday, June 03, 2008

பாடம்

ஒரு மீனவன் ஒரு நாள் விடியறதுக்கு முன்னாடியே சீக்கிரமா எழுந்திரிச்சுட்டான். முந்துன நாள் அமாவாசைங்றதுனால கடற்கரைல வெளிச்சமே இல்லை. அதுனால சூரியன் உதிக்கிற வரைக்கும், கடலுக்குள்ள போக முடியாது. அவன் பக்கத்துல சின்னச் சின்னதா கொஞ்சம் கற்கள் இருந்தன. சரின்னு பொழுது போறதுக்காக, அந்தக் கற்களை ஒன்னொன்னா எடுத்து கடலுக்குள்ள வீசி விளையாட ஆரம்பிச்சான். கடைசி கல்லு ரொம்ப ரொம்பச் சின்னக் கல்லு. அந்தக் கல்ல கைல எடுத்தப்ப விடிய ஆரம்பிச்சது. வெளிச்சத்துல பார்க்கும்போதுதான் அவ கையிலயிருந்தது வைரக்கல்லுன்னு தெரிஞ்சது. அப்பத்தான் அவன் தன்னோட துரதிர்ஷ்டத்தை உணர்ந்து, எல்லா கற்களையும் கடலுக்குள்ள வீசியெறிஞ்சிட்டதை நினைச்சு வருத்தப்பட்டான்.

கதை சொல்லும் பாடம் : காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாது.

6 comments:

ஜெகதீசன் said...

//
கதை சொல்லும் பாடம் : காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாது.
//
:)
இதுக்குத் தான்.... நான் காலைல 7 மணிக்கு முன்னாடி எழுந்திரிக்கிறதே இல்லை..... :P

PPattian said...

கடைசி கல்லு மட்டும்தான் வைரக்கல்லு.. மத்ததெல்லாம் சாதா கல்லுதான்.. ஆனாலும் மனித மனம் அப்படியெல்லாம் எண்ணி திருப்தி அடையாது.

எது கிடைக்கனுமோ, அது கிடைக்காம இருக்காது.. அந்த குட்டி கல்லாவது கிடைச்சதே..

அவன் லேட்டா எழுந்திரிச்சா, வேற யாராவது அவனுக்கு முன்னாடியே எழுந்து எல்லா கல்லையும் லாவிட்டு போயிருப்பாங்க..

யோசிப்பவர் said...

புபட்டியன்,

//எது கிடைக்கனுமோ, அது கிடைக்காம இருக்காது//
//அவன் லேட்டா எழுந்திரிச்சா, வேற யாராவது அவனுக்கு முன்னாடியே எழுந்து எல்லா கல்லையும் லாவிட்டு போயிருப்பாங்க..
//

கதை சொன்னா கேட்கனும்! கருத்து சொல்லக் கூடாது!!;-))

ரசிகன் said...

//கதை சொல்லும் பாடம் : காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாது.//

ஹா..ஹா... நல்லாவே பாடம் சொல்லித் தரிங்க தாத்தா,,:)))))

rapp said...

நல்லா நச்சுன்னு இருக்குங்க உங்க குட்டி கதை.

பனித்துளி சங்கர் said...

சிந்தனைக்கு சிறப்பு . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்