Sunday, December 31, 2006

கவித?!?

மழையில் நனைய
உனக்கு ஆசைதான்
இருந்தாலும் குடை பிடிப்பேன்
ஏனென்றால்,
உன் மண்டையிலுள்ள
களிமண் கரையாமலிருக்க!!!

Read it!!!

This dog is one cat of donkey the best monkey ways to pigs make you a rat a fool!
..

..

..

..

..

..

..
CONFUSED?!?



Now Read it again, leaving your nick names!!!

Thursday, December 28, 2006

சர்தார்

ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?

சர்தார் : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!

கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்

வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?

பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!

வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும்!

பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?

வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே...

Monday, December 25, 2006

அண்ணே...

அண்ணனோட ஃபிரெண்ட அண்ணன்னு கூப்பிடறோம்.

அக்காவோட ஃபிரெண்ட அக்கான்னு கூப்பிடறோம்.

அப்படின்னா,

பெண்டாட்டியோட ஃபிரெண்ட எப்படி கூப்பிடறது?

சர்தார்ஜி

பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?

கோபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!!!

கவலைபடாதீங்க!

டைரக்டர் : நீங்க என்ன பண்றீங்க, 100 அடி உயரத்திலிருந்து அப்படியே நீச்சல் குளத்துக்குள்ள குதிக்கிறீங்க.

நடிகர் : ஆனா எனக்கு நீச்சல் தெரியாதே!

டைரக்டர் : கவலைபடாதீங்க! அந்த நீச்சல் குளத்துள தண்ணியே கிடையாது!

நடிகர் : ?!?!

Friday, December 22, 2006

இன்றைய தத்துவம்

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.

ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.

ஆனா...

கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??

யோசிக்கனும்...!!

கரப்பான்

மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,

"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.
ஏன் தெரியுமா?
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
ஏன்னா, அது "HIT" ஸாங்!!!

சர்தார்

சர்தார்ஜி ஆசிரியர், மாணவர்களுக்கு டிக்டேஷன் டெஸ்ட் வைத்தார்.

கடைசி பெஞ்ச் மாணவர்கள்,
"சார்! நீங்க சொல்றது சரியா கேட்க மாட்டேங்குது."


"சரி, சரி! நான் போர்ட்ல எழுதிப் போடுறேன்."

Thursday, December 14, 2006

Stress Test

ஒரு ஸிம்பிள் Stress டெஸ்ட்!

கீழேயுள்ள இரு கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்!

1) இரண்டு கால்கள் கொண்ட மௌஸ் எது?
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
மிக்கி மௌஸ்!


2) சரி, இரண்டு கால்கள் கொண்ட டக் எது?

..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..

நீங்கள் டொனால்ட் டக் என்று பதிலளித்தீர்கள் என்றால், உங்களுக்கு Mental Stress இருக்கிறது என்று அர்த்தம்.

ஏனென்றால் எல்லா டக்குக்குமே இரண்டு கால்கள்தான்!!!

Monday, December 11, 2006

அன்புள்ள வாடிக்கையாளர்களுக்கு...

ஒரு அரிய வாய்ப்பு!!


நீங்கள் '98411xxxxx' என்ற எண்ணுக்கு ரீ-சார்ஜ் செய்தால், உங்கள் ஃபேவரைட் வலைபதிவரான யோசிப்பவருடன் டின்னர் சாப்பிடலாம்(நாலு இட்லி, எக்ஸ்ட்ரா சட்னி கிடையாது!).


இந்த சலுகை இந்த வாரம் மட்டுமே!!


முந்துங்கள்!!!


முதல் ஐந்து பேருக்கு, எக்ஸ்ட்ரா ஒரு இட்லி!!!

போலியோ

அரசியல்வாதி சர்தார்ஜி : நாங்கள் ஆட்சிக்கு வந்தால், போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக, ஒரிஜினல் சொட்டு மருந்து கொடுப்போம் என்று உறுதி கூறுகிறேன்.

தாதா வந்துட்டார்

எஸ்.எம்.எஸ். தாதா திரும்பி வந்துட்டார். ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த எஸ்.எம்.எஸ் தாதா 'யோசிப்பவர்', மறுபடியும் வலைப்பதிவுகளுக்கு திரும்பி விட்டார். ஆதலால் வலைப்பதிவு வைத்திருக்கும் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கபடுகின்றனர்.