Friday, June 29, 2007

கல்லூரிக் குறள்

அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கும் கருவி அரியர்.

"அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
ஆல் கிளியர் செய்பவர்"

"அரியர்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
வாக்-இன் சென்றே சாவார்"


- படிப்பவரைக் கண்டால் வயிரெறிபவர் சங்கம்.

பாஸ்ஜி

ரிஸல்ட் நாளு தெரிஞ்சு போச்சுன்னா, லீவு நாளு நரகம் ஆயிரும். சன்தோஷம்தாங்க முக்கியம்!!!

- பரிட்சை சரியா எழுதாம டயலாக் பேசி சமாளிப்போர் சங்கம்.

டாக்டர்!?!

நோயாளி : டாக்டர்!, ரெண்டு நாளா பயங்கர தலைவலி. என்னால பொறுக்க முடியல!!!

டாக்டர் : தலை வலிக்கும்போது எதுக்கு பொருக்க போறீங்க? ரெஸ்ட் எடுக்கலாம்ல!!!!

Wednesday, June 13, 2007

பஞ்ச் குறுஞ்செய்தி

யோசிப்பவர்
என்ன பாக்குற? பேரப் பார்த்தாலே ச்சும்மா அதிருதுல்ல!!!

அப்படி அதிரலைன்னா, 'செல்'ல வைப்ரைட்டிங் மோடுக்கு மாத்து. திரும்பவும் அனுப்பறேன். திரும்!!!

சிவாஜி டிக்கட்

சிவாஜி பார்க்கத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு இனிய நற்செய்தி!
என்னிடம் 'சிவாஜி'க்கு நான்கு டிக்கட்டுகள் இருக்கின்றன. ஜுன் 15க்கு சத்யம் தியேட்டரில் மதிய காட்சி! உங்களுக்கு அவை வேண்டுமென்றால் பின்னூட்டத்தில் முன்பதிவு செய்யலாம்.

















ஆனால் அவை பார்கிங் டிக்கட்டுகள். பரவாயில்லையா?

Saturday, June 09, 2007

இன்றைய தத்துவம்

மண்டை உடையாம இருக்க

ஹெல்மெட் போடலாம்

ஆனா,

ஹெல்மெட் உடையாம இருக்க

மண்டையப் போட முடியுமா?

உலகப் புகழ் ஜோ. சி. ஜொள்ஷன் கருத்து கணிப்பு

உலகப் புகழ் ஜோ. சி. ஜொள்ஷன் நடத்திய கருத்துக் கருத்து கணிப்பு முடிவுகள்...

86% பையன்கள் கேர்ள் ஃபிரண்ட்ஸோடு இருக்கிறார்கள்

மீதம் 14%,.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

மூளையோடு இருக்கிறார்கள்.

என்னைப் போல!

எங்க போயி முட்டிக்கிறது?

எக்ஸாம்ல ஃபெய்ல் ஆகிட்டா

திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம்.

ஆனா, பாஸ் ஆகிட்டா

திரும்ப படிச்சு ஃபெய்ல் ஆக முடியுமா?

- இப்படிக்கு செவத்துல முட்டி முட்டி யோசிப்போர் சங்கம்

அண்ணே..

விடிய விடிய

டீவி ஓடினாலும்

அதால ஒரு இன்ச் நகர முடியுமா?