Tuesday, October 24, 2006

டைட்டானிக் - தமிமிமிழில்!!!

சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் வழங்கும் "டைட்டானிக்" - தமிழில் "சமுத்திர வீரன்"

ஹீரோ விஜயகாந்த், ஹீரோயின் ஐஸ்வர்யா

முடிவு மட்டும் சிறிது(ஆங்கிலத்திலிருந்து) மாற்ற பட்டுள்ளது(தமிழ் மக்கள் ஹீரோ சாவதை ஒத்து கொள்ள மாட்டார்கள்!!).

விஜயகாந்த் கடைசி கட்டத்தில், கடலில் குதித்து, ஒரு கையில் ஐஸ்வர்யாவையும், மறு கையில் டைட்டானிக்கையும் பிடித்து கொண்டு கரைக்கு நீந்தி வருகிறார்.

கிளைமாக்ஸில் விஜயகாந்துக்கும் சுறாமீனுக்கும் நடக்கும் ஆக்ரோஷமான சண்டை காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

4 comments:

பொன்ஸ்~~Poorna said...

//கிளைமாக்ஸில் விஜயகாந்துக்கும் சுறாமீனுக்கும் நடக்கும் ஆக்ரோஷமான சண்டை காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.//

சுறாமீன் சண்டைக்கு முன்னால் காப்டன், "ஹே, உலகத்துல மொத்தம் அஞ்சு பெருங்கடல் இருக்கு, அதுல மொத்தம் 1000000 மீன் இருக்கு.. 100000 மீனுல 5000 சுறா மீன் இருக்கு.. அதுலயும் தமிழ்நாட்டுக்குப் பக்கத்துல 500 சுறா இருக்கு.. " அப்படீன்ன்னு வசனம் பேசி சுறாவை டயர்டாக்கிவிட்டுத் தானே சண்டை போட்டாரு? ;)

லதா said...

கேப்டன் அவர்கள் கப்பலின் வெளிப்பக்கத்தில் காலை வைத்துக்கொண்டுதானே சுறாமீனைத் தாக்கினார் ? :-)))

வெங்கட்ராமன் said...

ஹே, உலகத்துல மொத்தம் அஞ்சு பெருங்கடல் இருக்கு, அதுல மொத்தம் 1000000 மீன் இருக்கு.. .................

சூப்பரப்பூ. . .. . .

Chandravathanaa said...

இப்படத்தை டப்பிங் செய்திருந்தார்கள். சில வாரங்களுக்கு முன் சன்தொலைக்காட்சியில்(அன்று இலவசம்) அது ஒளிபரப்பப் பட்டது. ஜேர்மனிய மொழியில் பார்த்த படத்தை தமிழில் பார்க்க முடிந்த போது சந்தோசமாக இருந்தது.