Showing posts with label துணுக்கு. Show all posts
Showing posts with label துணுக்கு. Show all posts

Tuesday, May 04, 2010

புகை

ஒரு ஏர்போர்ட்டில் நின்று கொண்டு ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த ஒரு மனிதன், புகை பிடித்துக் கொண்டிருந்த அந்த மனிதரிடம் சென்று, “ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை முறை புகை பிடிப்பீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், ”எதற்காக கேட்கிறீர்கள்?” என்றார்.

“இதுநாள் வரை, புகை பிடிப்பதற்காக நீங்கள் செலவழித்த பணத்தை சேமித்து வைத்திருந்தீர்களானால், எதிரே நிற்கும் இந்த விமானத்தையே இன்று நீங்கள் சொந்தமாக விலைக்கு வாங்கியிருக்கலாம். அதற்காகத்தான் கேட்டேன்.” என்றார்.

உடனே அந்த மனிதர், “அப்படியானால் அந்த விமானம் உங்களுக்கு சொந்தமானதா?”

“இல்லை.”

“உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி! ஆனால், அந்த விமானம் இப்பொழுது கூட எனக்கு சொந்தமானதுதான்.” என்றார் அந்த புகை பிடிப்பவர்.

Moral of the Story : Unneccessary Advice is injurious to health.

Friday, April 17, 2009

இரு...

இருட்டு நகரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது. அந்த லைப்ரரியில் இரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு. அந்தப் பக்கம் இரண்டு Coloumnகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இன்னொரு Columnல் Fluffy வகை பூனைகளின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து என்னத் தெரிகிறது?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
யானைக்கு ஒரு COLUMN வந்தால், பூனைக்கு ஒரு COLUMN வரும்.

நோ, நோ, நோ. அழக்கூடாது!!!

Thursday, April 09, 2009

ஆமையும் முயலும்

ஆமையும் முயலும் +2 எக்ஸாம் எழுதிச்சுதுங்க. ஆமை 1109 மார்க் தான் எடுத்தது. முயல் 1124 எடுத்துடுச்சி. ஆனாலும் இஞ்சினியரிங் சீட் கவுன்சிலிங்ல ஆமைக்கு சீட் கிடைச்சது. முயலுக்கு சீட் கிடைக்கல. ஏன் தெரியுமா?
...

..

.

.

..

...

செகண்ட் ஸ்டாண்டர்ட்லேயே முயல் ஆமை ரன்னிங் ரேஸ்ல ஆமைதானே ஜெயிச்சுது. ஸ்போர்ட்ஸ் கோட்டா இருக்குல்ல?!

Monday, September 22, 2008

மூன்று கேள்விகள்

புதுசா சிக்கினவர் : வக்கீல் சார்! உங்கள் ஃபீஸ் எவ்வளவுன்னு சொல்ல முடியுமா?
வக்கீல் : சொல்லலாமே! மூன்று கேள்விகளுக்கு பதில் 1000 ரூபாய்.
புதுசா சிக்கினவர் : ரொம்ப அதிகமாயிருக்கே?
வக்கீல் : ஆமாம். அதிகம்தான். சரி, உங்க மூன்றாவது கேள்வி என்ன?

X---------X--------X---------X--------X----------X

நல்ல வக்கீலுக்கும், திறமையான வக்கீலுக்கும் என்ன வித்தியாசம்?
நல்ல வக்கீலுக்கு சட்டம் நன்றாக தெரியும். திறமையான வக்கீலுக்கு ஜட்ஜை நன்றாக தெரியும்!!!

Tuesday, June 03, 2008

பாடம்

ஒரு மீனவன் ஒரு நாள் விடியறதுக்கு முன்னாடியே சீக்கிரமா எழுந்திரிச்சுட்டான். முந்துன நாள் அமாவாசைங்றதுனால கடற்கரைல வெளிச்சமே இல்லை. அதுனால சூரியன் உதிக்கிற வரைக்கும், கடலுக்குள்ள போக முடியாது. அவன் பக்கத்துல சின்னச் சின்னதா கொஞ்சம் கற்கள் இருந்தன. சரின்னு பொழுது போறதுக்காக, அந்தக் கற்களை ஒன்னொன்னா எடுத்து கடலுக்குள்ள வீசி விளையாட ஆரம்பிச்சான். கடைசி கல்லு ரொம்ப ரொம்பச் சின்னக் கல்லு. அந்தக் கல்ல கைல எடுத்தப்ப விடிய ஆரம்பிச்சது. வெளிச்சத்துல பார்க்கும்போதுதான் அவ கையிலயிருந்தது வைரக்கல்லுன்னு தெரிஞ்சது. அப்பத்தான் அவன் தன்னோட துரதிர்ஷ்டத்தை உணர்ந்து, எல்லா கற்களையும் கடலுக்குள்ள வீசியெறிஞ்சிட்டதை நினைச்சு வருத்தப்பட்டான்.

கதை சொல்லும் பாடம் : காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாது.

Wednesday, April 09, 2008

நல்ல காதலன்

பைக் ஓட்டிச் செல்பவரின், டீஷர்ட்டின் பின்புறம் இருந்த வாசகம்

"இதை நீங்கள் படிக்க நேர்ந்தால், என்னுடைய காதலி கீழே விழுந்து விட்டாள் என்பதை எனக்குத் தெரிவிக்கவும்."

Monday, November 26, 2007

சொல்லித் தராதவை

25
-7
--
--


சின்ன வயசுல அஞ்சுல ஏழு போகலைன்னா, பக்கத்துல கடன் வாங்கனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.

ஆனா,

அப்படி வாங்குன கடனை எப்ப திருப்பிக் கொடுக்கனும்னு யாரும் சொல்லியே தரலையே!!

-ரொம்ப நல்லவிங்க சங்கம்.

Wednesday, August 22, 2007

ஏபிசிடி...

டீச்சர் : ஏபிசிடி எத்தனை எழுத்துக்கள்?

பையன் : நாலு

டீச்சர் : மொத்தமாக!

பையன் : ஐந்து

டீச்சர் : என்னது?

பையன் : நாலு

டீச்சர் : அறிவு கெட்டவனே!

பையன் : எட்டு

டீச்சர் : நிப்பாட்டு!!

பையன் : ஐந்து

டீச்சர் : ?!?!

Friday, August 10, 2007

ஒரு கேள்வி ஒரு பதில்

டீச்சர் : கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்யனும்?

பையன் : சொரிஞ்சு விடலாம் டீச்சர்

டீச்சர் : ?!?!?

Friday, June 29, 2007

கல்லூரிக் குறள்

அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கும் கருவி அரியர்.

"அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
ஆல் கிளியர் செய்பவர்"

"அரியர்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
வாக்-இன் சென்றே சாவார்"


- படிப்பவரைக் கண்டால் வயிரெறிபவர் சங்கம்.

பாஸ்ஜி

ரிஸல்ட் நாளு தெரிஞ்சு போச்சுன்னா, லீவு நாளு நரகம் ஆயிரும். சன்தோஷம்தாங்க முக்கியம்!!!

- பரிட்சை சரியா எழுதாம டயலாக் பேசி சமாளிப்போர் சங்கம்.

டாக்டர்!?!

நோயாளி : டாக்டர்!, ரெண்டு நாளா பயங்கர தலைவலி. என்னால பொறுக்க முடியல!!!

டாக்டர் : தலை வலிக்கும்போது எதுக்கு பொருக்க போறீங்க? ரெஸ்ட் எடுக்கலாம்ல!!!!