Friday, February 23, 2007

அண்ணே...

விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.

ஆனா,

கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?

- ரூம் போட்டு, மல்லாக்கப் படுத்து, பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.

Saturday, February 17, 2007

டப்பிங் படங்கள்

உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.



திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).

செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)

புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)

வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)

வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)

Thursday, February 15, 2007

சர்தார்

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!
சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.
சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.

என்ன இது அக்கிரமம்?

மாணவன் : சார்! இது என்ன?

ஆசிரியர் : கேள்வித்தாள்!

மாணவன் : சார்! இது என்ன?

ஆசிரியர் : விடைத்தாள்!

மாணவன் : என்ன அக்கிரமம் சார்? கேள்வித்தாள்ள கேள்வி இருக்குது. ஆனா விடைத்தாள்ள விடையை காணோம்!

ஆசிரியர் : ?!?!

இதுதான் அர்த்தமா?

காதலிக்கும் பெண்கள் சொல்லும் வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்!

ஐ லவ் யூடா - உனக்கு ஆப்பு கன்ஃபார்ம்டா!
ஐ மிஸ் யூடா - உன்னை தொலைச்சு கட்டப் போறேன்டா!
ஊ அர் மை லைஃப்டா - உன் உயிர் என் கைலடா!
டேய், யூ ஆர் மய் செல்லம் - டேய் நீ என் வீட்டு நாய்!
டேய், ஐ வான்ட் டூ மேரி யூ - டேய் உனக்கு மரண தண்டனை!!!

(உனக்கு லவ்வு ஸ்டார்ட் ஆகுதுன்னா 7:30 ஸ்டார்ட் ஆகுதுன்னு அர்த்தம்!!!)