இரவு மேலும் மேலும் இருட்டானது.
நிலவு மேலும் மேலும் மேலெழுந்தது.
நான் காரை நிறுத்தினேன்.
அவள் என்னை கள்ளத்தனமாக பார்த்து கொண்டே,
"என்னாச்சு?" என்றாள்.
நான் அவளருகே சென்றேன்.
அவள் முகம் சிவந்தது.
மேலும் நெருங்கினேன்.
அவளிடம் சொல்லி விட வேண்டியதுதான்.
ஆனால் நம்புவாளா!
தயக்கமாயிருந்தது.
கடைசியில் அந்த மூன்று வார்த்தைகளை சொல்லியே விட்டேன்.
"பெட்ரோல் இல்லை. எறங்குடி"
Tuesday, May 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment