Monday, November 26, 2007

சொல்லித் தராதவை

25
-7
--
--


சின்ன வயசுல அஞ்சுல ஏழு போகலைன்னா, பக்கத்துல கடன் வாங்கனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.

ஆனா,

அப்படி வாங்குன கடனை எப்ப திருப்பிக் கொடுக்கனும்னு யாரும் சொல்லியே தரலையே!!

-ரொம்ப நல்லவிங்க சங்கம்.

Thursday, September 27, 2007

புல்

அருகம்புல் ஜூஸ் குடிச்சா உடம்புக்கு நல்லதுதான்.

ஆனா, நான் குடிக்க மாட்டேன்.

ஏன்னா,

புலி பசிச்சாலும், புல்லை மட்டும் இல்லை; அதோட ஜூஸ கூட சாப்பிடாது!!!

Tuesday, September 18, 2007

என்ன ஒரு சிந்தனை?

யானை மேல

ஆள் உட்கார்ந்தால் RIDE

ஆனா,

ஆளு மெல யானை

உட்கார்ந்தா DIED

Wednesday, August 22, 2007

ஏபிசிடி...

டீச்சர் : ஏபிசிடி எத்தனை எழுத்துக்கள்?

பையன் : நாலு

டீச்சர் : மொத்தமாக!

பையன் : ஐந்து

டீச்சர் : என்னது?

பையன் : நாலு

டீச்சர் : அறிவு கெட்டவனே!

பையன் : எட்டு

டீச்சர் : நிப்பாட்டு!!

பையன் : ஐந்து

டீச்சர் : ?!?!

Friday, August 10, 2007

ஒரு கேள்வி ஒரு பதில்

டீச்சர் : கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்யனும்?

பையன் : சொரிஞ்சு விடலாம் டீச்சர்

டீச்சர் : ?!?!?

பல்வலி

பல்வலிக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தெரியாதா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இது கூடவாத் தெரியலை?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பல்லுதான்!!!

Thursday, July 26, 2007

சென்னை செந்தமிழ்

சென்னை செந்தமிழில் நீதிமன்ற நடைமுறைகள்...

Yes my lord - இன்னா நைனா?

Objection my lord - அமிக்கி வாசி அண்ணாத்த

Court is adjourned - உன்னொரு தபா பாக்லாம்

Objection overruled - கெளம்பு, காத்து வர்ட்டும்

Order! Order! -
ஐயே! கம்னு கெட!

ராணுவம்

இந்திய கப்பற்படைக்கும், இந்தியத் தரைப்படைக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா?





















மன்னிக்கவும்! ராணுவ ரகசியத்தை வெளியே சொல்ல முடியாது!

Tuesday, July 10, 2007

டீல்

உங்க செல்லுக்கு என்னோட அட்ரஸ அனுப்புறேன்.

அதே மாதிரி,

என் அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்பறீங்களா?


- போட்டு வாங்குவோர் சங்கம்

சிக்குன் குனியா

சிக்குன் குனியா மீண்டும் பரவுகிறது. அதனால் சிக்கன் சாப்பிடும்பொழுது யாரும் குனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீகள்!!!

- சிக்கன் சாப்பிட்டு கொண்டே யோசிப்போர் சங்கம்

Friday, June 29, 2007

கல்லூரிக் குறள்

அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கும் கருவி அரியர்.

"அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
ஆல் கிளியர் செய்பவர்"

"அரியர்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
வாக்-இன் சென்றே சாவார்"


- படிப்பவரைக் கண்டால் வயிரெறிபவர் சங்கம்.

பாஸ்ஜி

ரிஸல்ட் நாளு தெரிஞ்சு போச்சுன்னா, லீவு நாளு நரகம் ஆயிரும். சன்தோஷம்தாங்க முக்கியம்!!!

- பரிட்சை சரியா எழுதாம டயலாக் பேசி சமாளிப்போர் சங்கம்.

டாக்டர்!?!

நோயாளி : டாக்டர்!, ரெண்டு நாளா பயங்கர தலைவலி. என்னால பொறுக்க முடியல!!!

டாக்டர் : தலை வலிக்கும்போது எதுக்கு பொருக்க போறீங்க? ரெஸ்ட் எடுக்கலாம்ல!!!!

Wednesday, June 13, 2007

பஞ்ச் குறுஞ்செய்தி

யோசிப்பவர்
என்ன பாக்குற? பேரப் பார்த்தாலே ச்சும்மா அதிருதுல்ல!!!

அப்படி அதிரலைன்னா, 'செல்'ல வைப்ரைட்டிங் மோடுக்கு மாத்து. திரும்பவும் அனுப்பறேன். திரும்!!!

சிவாஜி டிக்கட்

சிவாஜி பார்க்கத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு இனிய நற்செய்தி!
என்னிடம் 'சிவாஜி'க்கு நான்கு டிக்கட்டுகள் இருக்கின்றன. ஜுன் 15க்கு சத்யம் தியேட்டரில் மதிய காட்சி! உங்களுக்கு அவை வேண்டுமென்றால் பின்னூட்டத்தில் முன்பதிவு செய்யலாம்.

















ஆனால் அவை பார்கிங் டிக்கட்டுகள். பரவாயில்லையா?

Saturday, June 09, 2007

இன்றைய தத்துவம்

மண்டை உடையாம இருக்க

ஹெல்மெட் போடலாம்

ஆனா,

ஹெல்மெட் உடையாம இருக்க

மண்டையப் போட முடியுமா?

உலகப் புகழ் ஜோ. சி. ஜொள்ஷன் கருத்து கணிப்பு

உலகப் புகழ் ஜோ. சி. ஜொள்ஷன் நடத்திய கருத்துக் கருத்து கணிப்பு முடிவுகள்...

86% பையன்கள் கேர்ள் ஃபிரண்ட்ஸோடு இருக்கிறார்கள்

மீதம் 14%,.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

மூளையோடு இருக்கிறார்கள்.

என்னைப் போல!

எங்க போயி முட்டிக்கிறது?

எக்ஸாம்ல ஃபெய்ல் ஆகிட்டா

திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம்.

ஆனா, பாஸ் ஆகிட்டா

திரும்ப படிச்சு ஃபெய்ல் ஆக முடியுமா?

- இப்படிக்கு செவத்துல முட்டி முட்டி யோசிப்போர் சங்கம்

அண்ணே..

விடிய விடிய

டீவி ஓடினாலும்

அதால ஒரு இன்ச் நகர முடியுமா?

Thursday, May 31, 2007

புதுசு

வணக்கம் நண்பர்களே! ஒன்னுமில்லை என்னோட மொபைல் நம்பர் மாறிவிட்டது. கீழேயுள்ள என் புது நம்பரை நோட் பண்ணிக்குங்க.
.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


"100"



ங்கொக்கா மக்கா! இப்ப மிஸ்டு கால் கொடுங்க, பார்ப்போம்!!!

Wednesday, May 30, 2007

அண்ணே...

சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசியில காச கரியாக்குவாங்க!

நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!

- வித்தியாச வித்தியாசமாக யோசிப்போர் சங்கம் (ISO 9001 Certified)

Monday, May 21, 2007

சென்னை செந்தமிழ்!!!

பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!

ஆச்சர்யமாதான் கீது நா உன்ன பாக்க சொல்லொ

யெம்மா ஒசரத்துல கீற,

வானத்து மேல கீற,

சொம்மா வைரமாறி மின்னிகினு

பளிச்சு! பளிச்சு! தம்மாத்துண்டு இஸ்டாரே!



புரியலையா? இது சென்னை செந்தமிழில் "Twinkle Twinkle Little Star!!!!"

Thursday, May 10, 2007

அண்ணே...

பையி 'கட்'டானா தைக்கலாம்;


துணி 'கட்'டானாலும் தைக்கலாம்;


தோலு 'கட்'டானாகூட தைக்கலாம்;




ஆனா,




கரன்ட் 'கட்'டானா தைக்க முடியுமா?


- இருட்டுல உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்

Saturday, April 28, 2007

வெட்டிப் பயவுள்ள

கைப்புள்ள :

நீ


ஃப்ரீயா


இருந்தா,


இந்த கோட்டத்


தாண்டி படிச்சுப்பாரு!







-------------------------------------------------














ஒத்துக்கறேன். வெட்டியாத்தான் இருக்கேன்னு ஒத்துக்கறேன். நெக்ஸ்ட் போஸ்ட்ல மீட் பண்றேன்.

அண்ணே...

கருப்பு ஒரு கலரு

வெள்ளை ஒரு கலரு

ஆனா கருப்பு வெள்ளை டீ.வி. கலர் டீ.வி. கிடையாது.

- இன்னமும் கருப்பு வெள்ளை டீ.வி. பார்ப்போர் சங்கம்

Friday, April 27, 2007

இன்றைய தத்துவம்

பவர் கிளாஸை,

என்னதான் ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தாலும்

அது கூலிங் கிளாஸ் ஆகாது

- கூலிங் கிளாஸ் போட்டு யோசிப்போர் சங்கம்


கூலிங் கிளாஸ் போட்டு

பவர் ரேஞ்சர்ஸ் பார்த்தாலும்

அது பவர் கிளாஸ் ஆகாது.

- பவர் கிளாஸ் போட்டு யோசிப்போர் சங்கம்

Tuesday, April 24, 2007

இன்றைய தத்துவங்கள்...

1) சன்டே ஆனா ஜாலியா சண்டை போடலாம்,

அதுக்காக,

மன்டே ஆனா ஜாலியா மண்டையப் போட முடியாது



2) போலீஸ் ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டால் போலீஸ் வரும்,

ஆனா,

ரயில்வே ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டா ரயில் வருமா?



3) குளவி கொட்டினா வலிக்கும்.

தேள் கொட்டினா கூட வலிக்கும்.

ஆனா

முடி கொட்டினா வலிக்குமா?


- தத்துவ ரீதியாக மட்டுமே யோசிப்போர் சங்கம்

Saturday, April 21, 2007

என்ன ஒரு சிந்தனை?!?!

சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.

ஆனா,

முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!

- எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்

Friday, April 20, 2007

இன்றைய தத்துவம்

Tea மாஸ்டர் என்னதான் லைட்டா Tea போட்டாலும்

அதுலயிருந்து வெளிச்சம் வராது.


- இது ஒரு சங்கம் சேராத தத்துவம்!!!

Thursday, April 19, 2007

அண்ணே...

Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!


ஆனா,


பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!

கொஞ்சம் யோசிங்க!!!


- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்

இன்றைய தத்துவம்

தண்ணீர், டீ, ஜூஸ்


என்று சொல்லும்பொழுது உதடுகள் ஒட்டாது.


பீர், பிராந்தி, ரம்


என்று சொல்லும்பொழுது உதடுகள்கூட ஒட்டும்।

- ஃபுல் அடிச்சதுக்கப்புறமும் தெளிவாக யோசிப்போர் சங்கம்

Wednesday, April 18, 2007

ஓவியம்

கீழே பாருங்கள்.













ஒரு ஓவியர் எவ்வளவு அழகாக அந்த குரங்கை வரைந்து கொண்டிருக்கிறார்!!














அந்த குரங்கு வேறு, என்னென்ன சேட்டைகளெல்லாம் செய்கிறது பாருங்கள்!!!!




























Tuesday, April 17, 2007

புரியுதா?

3GA PA6



இது என்னன்னு தெரியுதா?



புரியலையா?



இன்னோரு தடவை நல்லா பாருங்க.



இன்னும் தெரியலையா?



மூஞ்சிய பாரு!!!

Wednesday, April 11, 2007

புரிந்து கொள்!

எல்லோரும் உன்னிடமிருந்து விலகி போனால்,


யாருமே உன்னருகில் வருவதில்லையானால்,


நீ தனிமையாக்கப் பட்டதாக உணர்வாயானால்,


அதற்காக வருத்த்ப்படாமல் ஒன்று புரிந்து கொள்.


அப்பொழுது நீ கண்டிப்பாக குளித்தாக வேண்டும்!!!

Cool Fundamentals of Life

Money is not everything. There are Master and Visa Cards.

One should love animals. They are so tasty.

Save water. Drink wine.

Love your neighbour. But dont get caught.

Every man should marry. Because, happiness is not the only thing in life.

Thursday, March 22, 2007

அண்ணே...

எனக்கு ஒரு சந்தேகம்...

நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

ஓவியக் கலைன்னா படம் வரையறது.

அப்ப தவக்களைன்னா?


- நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்

வடி கட்டின கஞ்சத்தனம்

சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.

உடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.

அட்வைஸ் அய்யாவு..

வாழ்க்கையில் நடக்கும் பொழுது, ஏற்றமும் இருக்கும், இறக்கமும் இருக்கும்; மலர்களும் இருக்கும், முட்களும் இருக்கும்.


அதனால எல்லோருக்கும் நான் சொல்வது என்னவென்றால், எங்கே போனாலும் செருப்பு(அல்லது ஷூ) அணிந்து செல்லுங்கள்!!!

இன்றைய தத்துவம்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்

ஆனா,

நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.


- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

Wednesday, March 21, 2007

அண்ணே...

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?

"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும்.


- ரோட்டில் உருண்டு பிரண்டு யோசிப்போர் சங்கம்.

Monday, March 19, 2007

வர மாட்டாய்ங்களோ!!!

இன்ஸமாம் : வருவிவிவியா!!! வரமாட்ட்ட்டியா? வரலேன்னா உன் பேச்சுக் கா!!!

டிராவிட் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்!!!

பங்காளி

இன்ஸமாம் : பங்காளி! பை டா. நாங்க கெளம்பறோம்.

டிராவிட் : அட இருங்க பங்காளி. ஒரு நாள் வெய்ட் பண்ணுங்க. நாங்களும் வந்துடுவோம்.

இன்ஸமாம் : சரி பங்காளி! ஒரே டிக்கட்டா எடுத்துடுவோம்!!!

Friday, March 16, 2007

இன்றைய தத்துவம்

என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும்,



அதால,



டிகிரி வாங்க முடியாது!!!

இந்தியா ஏன் கஷ்டப்படுது?

மக்கள்தொகை நூறு கோடிக்கு மேல இருந்தும் இந்தியா ஏன் கஷ்டப்படுது? ஏன்னா, 7.9 கோடி பேர் ரிடையர் ஆனவங்க. 30 கோடி பேர் ஸ்டேட் கவர்மென்ட், 17 கோடி பேர் சென்ட்ரல் கவர்மென்ட்(ரெண்டு பேரும் வேலை செய்யறதில்லை!). 1.1 கோடி பேர் ஐ.டி. அவங்க இந்தியாவுக்காக வேலை பார்ப்பதில்லை. 25 கோடி பேர் ஸ்கூலுக்கு போகும் மாணவர்கள். இரண்டு கோடி பேர் 5 வயசுக்கு கீழேயுள்ள குழந்தைகள். 15 கோடி பேர் வேலையில்லாதவர்கள்.1.2 கோடி பேர எப்பவும் நீங்க ஆஸ்பத்திரில பார்க்கலாம். புள்ளி விவர கணக்குப்படி 79,99,998 பேர் சிறையிலிருக்கிறார்கள். மீதியிருக்கிறது நீங்களும், நானும்தான். நீங்களும் உங்க கம்ப்யூட்டர் ஸ்கிரீன்ல பிஸியா இருக்கீங்க!!! நான் ஒருத்தனே தனியா எப்படி இந்தியாவ ஹேண்டில் பண்றது???

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர வழிகள்


நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கனும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

ஒரு கேள்வி

இது அறிவாளிங்களுக்கான ஒரு கேள்வி!!!














































































அதான் அறிவாளிங்களுக்குன்னு சொல்லிட்டன்ல. அப்புறம் என்ன லொட்டு லொட்டுனு அமுக்கிகிட்டு?! போங்க. போய் வேலையப் பாருங்க.

Tuesday, March 06, 2007

குட் நைட்

விழிப்போம் என்ற நம்பிக்கையில் தூங்குவதைவிட,

நாளைக்காவது குளிப்போம் என்ற லட்சியத்தோடு தூங்கு!!!

அண்ணே...

நாம 21ஐ "டுவென்டி ஒன்"னு சொல்றோம்.

31ஐ "தேர்ட்டி ஒன்"னு சொல்றோம்.

41ஐ "ஃபார்டி ஒன்"னு சொல்றோம்.

அப்ப ஏன்,

11ஐ மட்டும் "ஒன்ட்டி ஒன்"னு சொல்லக் கூடாது?

- பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.

வெட்டி

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

ஆசிரியர் : ?!?!

குங்குமம்

குங்குமம் - இந்த வாரம்!





























































சந்தனம் - அடுத்த வாரம்!!!

Wednesday, February 28, 2007

இறைவா! இவர்களை மன்னித்துவிடு!!!

எல்லா பாவத்திலிருந்தும் விடுபட இறைவனின் இந்த படத்தைப் பாருங்கள்.















































பாவிகளின் கண்களுக்கு அவர் தெரிய மாட்டார்.

இனியாவது திருந்துங்கள்!!

மொழி'பெயர்ப்பு'

ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?


















தெரியலையா?!?!


நான் பார்க்க நான் பார்க்க நான்

உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!

நாட்ட்ட்ட்டாமை....

பசுபதி : ஐயா...

நாட்டாமை : என்றா பசுபதி?

பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....

நாட்டாமை : அட என்றா??

பசுபதி : அதான் என்றோம்ல!!

நாட்டாமை : ?!?!

இன்றைய தத்துவம்...

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.

ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

Friday, February 23, 2007

இன்றைய தத்துவம்

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,

ரயிலேறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

சொன்னார்கள்

"சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி."

- ஜவஹர்லால் நேரு.


"நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்."

- மாஹாத்மா காந்தி.


எதை ஃபாலோ பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கே!?!?

பஞ்சர்

வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?

பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!

வடிவேலு : ?!?!

அண்ணே...

விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.

ஆனா,

கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?

- ரூம் போட்டு, மல்லாக்கப் படுத்து, பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.

Saturday, February 17, 2007

டப்பிங் படங்கள்

உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.



திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).

செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)

புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)

வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)

வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)

Thursday, February 15, 2007

சர்தார்

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!
சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.
சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.

என்ன இது அக்கிரமம்?

மாணவன் : சார்! இது என்ன?

ஆசிரியர் : கேள்வித்தாள்!

மாணவன் : சார்! இது என்ன?

ஆசிரியர் : விடைத்தாள்!

மாணவன் : என்ன அக்கிரமம் சார்? கேள்வித்தாள்ள கேள்வி இருக்குது. ஆனா விடைத்தாள்ள விடையை காணோம்!

ஆசிரியர் : ?!?!

இதுதான் அர்த்தமா?

காதலிக்கும் பெண்கள் சொல்லும் வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்!

ஐ லவ் யூடா - உனக்கு ஆப்பு கன்ஃபார்ம்டா!
ஐ மிஸ் யூடா - உன்னை தொலைச்சு கட்டப் போறேன்டா!
ஊ அர் மை லைஃப்டா - உன் உயிர் என் கைலடா!
டேய், யூ ஆர் மய் செல்லம் - டேய் நீ என் வீட்டு நாய்!
டேய், ஐ வான்ட் டூ மேரி யூ - டேய் உனக்கு மரண தண்டனை!!!

(உனக்கு லவ்வு ஸ்டார்ட் ஆகுதுன்னா 7:30 ஸ்டார்ட் ஆகுதுன்னு அர்த்தம்!!!)

Friday, February 09, 2007

ஹை

எப்படியிருக்கீங்க? அப்புறம், ஒரு முக்கியமான விஷயம். ரீஸன்ட்டா எடுத்த உங்களோட ஃபோட்டோ ஒன்னு வேனுமே. சே! சே! நீங்க நினைக்கிற மாதிரி குரங்கு, கிரங்குனெல்லாம் அப்புறம் கிண்டல் பண்ண மாட்டேன். ஒரு ஹாபிக்காக, 'கடவுளின் மிகப்பெரும் தவறுகள்' அப்படிங்கிற பேருல ஒரு ஆல்பம் கலெக்ட் பண்றேன் அவ்வளவுதான்.

சேர்ந்து

என்னையும் ஒன்னையும் சேர்த்து வச்சு பார்த்தா எப்படி இருக்கும்?

இப்படித்தான் இருக்கும்.

N1

இப்படித்தான் புதுசு புதுசா யோசிக்கனும்.

Of India

செல்லோ : The Pen of India

லக்ஸ் : The Soap of India

அமுல் : The taste of India

நீங்க : Total waste of India

எழுதியவர் : The Star of India

மூன்று உண்மைகள்

உண்மை ஒன்று : உங்கள் நாவால், உங்களது எல்லாப் பற்களையும் தொட முடியும்.

..
..
..
..
..
..
உண்மை இரண்டு : இதை படித்த பின் நூற்றுக்கு நூறு முட்டாள்கள்(முட்டாள்கள்தான்!), தங்கள் நாவால் தங்கள் பற்களை தொட முயலுவார்கள்.

..
..
..
..
..
..
உண்மை மூன்று : உண்மை ஒன்று பொய்

அப்ளிகேஷன்

ஒருவன் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் இன்டர்வியூவுக்கு சென்றான். அங்கெ முதலில் ஒரு அப்ளிகேஷன் ஃபார்மை நிரப்ப சொன்னார்கள். இவனும் நிரப்ப ஆரம்பித்தான். ஒரு இடத்தில் "Salary Expected :" என்று இருந்தது. இவன் வெகு நேரம் யோசித்தான். பின்பு அதற்கு நேராக எழுதினான்.

"YES."

Saturday, January 27, 2007

சர்வே

தமிழ் நாட்டு பெண்களிடம் சமீபத்தில்
"நீங்கள் யோசிப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?"
என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயின் முடிவுகள் கீழே.


7.53% - ஆம்.
0% - இல்லை.
92.47% - நாங்கள் அந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்களல்ல.

புது டிரஸ்

வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு எடுத்ததா?

பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது.

வடிவேல் : ?!?!

உன்னையே நீ எண்ணி...

கண்களை மூடுங்கள். உங்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள். குறிப்பாக உங்கள் முகத்தை நினைவில் நிறுத்துங்கள். இப்பொழுது கண்களை திறக்கவும்.


ஒரு பேய் படம் பார்த்த எஃபெக்ட் இருக்குமே!!!

Wednesday, January 24, 2007

அண்ணே...

ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.

அப்ப,

பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

மே

1 மே

2 மே

3 மே

4 மே

5 மே

6 மே

7 மே

8 மே


என்ன பாக்குறீங்க?

நாளைக்கு நான் ஒன்னு'மே' எழுதலைன்னு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான்!

ஹீரோக்களின் அடுத்த படங்கள்

ரஜினி - சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், நாகேஷ்.

விஜய காந்த் - தர்மபுரி, மசாலா பூரி, சோளா பூரி, பானி பூரி.

அஜித் - வரலாறு, புவியியல், வேதியல்,தாவரவியல்.

விஜய் - போக்கிரி, மொள்ளமாரி, கேப்மாரி.

சூர்யா - ஆறு, ஏழு, எட்டு ...

ஜீவா - ஈ, எறும்பு, கொசு, கம்பளிபூச்சி

ஆம்/இல்லை

கேட்கிற கேள்விக்கு ஆம், இல்லை இரண்டில் எதாவது ஒன்றைத்தான் பதிலளிக்க வேண்டும்.











நீங்கள் லூஸ் என்பது உங்கள் நண்பர்களுக்கு தெரியுமா?

Tuesday, January 23, 2007

உனது கைகள்

நான் தவறான பாதையில் செல்லும்பொழுது
சரியான பாதையை காட்ட
உனது கைகள் வேண்டும்.

நான் வெற்றி அடையும்பொழுது
என் முதுகை தட்டி கொடுக்க
உனது கைகள் வேண்டும்.

நான் தொலைந்து போனாலும்
எனக்கு வழி காட்ட
உனது கைகள் வேண்டும்.

அதனால்,

உடனே உனது கைகளை வெட்டி,
கூரியரில் அனுப்பி விடு.

Saturday, January 20, 2007

இன்றைய தத்துவம்

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.



ஆனா,



ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

அந்த ஐந்து விஷயங்கள்

வாழ்க்கைல அஞ்சு விஷயம் எப்ப வரும்னு நமக்கே தெரியாது.
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
அதான் நமக்கே தெரியாதுன்னு சொன்னேன்ல. தெரிஞ்சுதுன்னா சொல்ல மாட்டேனா!!!

Saturday, January 13, 2007

சர்தார்

கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.

சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.

Friday, January 12, 2007

இன்றைய தத்துவம்

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,

ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!



அதேமாதிரி,



என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,

லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

Monday, January 01, 2007

புத்தாண்டு சிறப்பு தத்துவம்

டிசம்பர் 31க்கும்,

ஜனவரி 1க்கும்

ஒரு நாள்தான் வித்தியாசம்.



ஆனால்,



ஜனவரி 1க்கும்,

டிசம்பர் 31க்கும்,

ஒரு வருசம் வித்தியாசம்.

இதுதான் உலகம்.